மும்பை, நவ.26: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று, தனது வரலாற்றில் 41 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. நேற்று மாலை சென்செக்ஸ் 40 ஆயிரத்து 916 புள்ளிகள் என்ற உயர்வுடன், வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வரலாற்றில் இல்லாத வகையில் 41 ஆயிரம் புள்ளிகள் என்ற புதிய உச்சத்துடன் வர்த்தகம் தொடங்கி நடைபெற்று வருகிறது.