நடிகர் சங்க தனி அதிகாரி: தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை

சென்னை, நவ.26: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் கார்த்தி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகப் பணிகளை கவனிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி.கீதாவை தனி அதிகாரியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து நடிகர் சங்கம் மற்றும் சங்கப் பொருளாளர் நடிகர் கார்த்தி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என தமிழக வணிக வரித்துறை செயலாளர், பதிவுத்துறை ஐஜி, தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் சார்பில் வாதிடப்பட்டது. நிலுவையில் உள்ள நடிகர் சங்க தேர்தல் வழக்குகளில் முடிவு எட்டும் வரையோ அல்லது ஓர் ஆண்டிற்கு மட்டுமே தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கல்யாணசுந்தரம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.