கோயம்பேட்டில் 3 டன் வாழைப்பழம் பறிமுதல்

சென்னை

சென்னை, நவ.26: ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 3 டன் வாழைப்பழங்களை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் உணவுப்பாதுப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, செயற்கை முறையில் ரசாயன தெலிப்பான்கள் மூலம் பழுக்க வைத்த 3 டன் வாழைப்பழங்கள் இருந்தது கண்டறியப்பட்டதையடுத்து, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், செயற்கை வண்ணங்கள் பூசப்பட்ட 250 கிலோ பச்சை வாழைப்பழங்கள், 10 கிலோ பீன்ஸ் ஆகியவற்றையும் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.