அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு இல்லை: வக்பு வாரியம்

இந்தியா

புதுடெல்லி, நவ.26: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாகவும், தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யமாட்டோம் என சன்னி வக்புவாரியம் இன்று அறிவித்துள்ளது. அயோத்தி வழக்கில் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோவில் கட்டுவதற்கும் பாபர் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்குமாறும் உத்தரவிட்டு இருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பேசப்பட்டு வந்த நிலையில் தீர்ப்பை ஏற்பதாக சன்னி வக்பு வாரியம் இன்று அறிவித்துள்ளது.