தாம்பரத்தில் தனியார் ஆஸ்பத்திரி முற்றுகை

சென்னை

தாம்பரம், நவ.26: பிரசவிக்க வந்த பெண்ணுக்கு குழந்தை இறந்ததால் மருத்துவர்களின் அலட்சிய போக்கே காரணம் என்றுகூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை யிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கத்தை பஜனை கோவில் தெருவை ச்சேர்ந்தவர் ஸ்ரீராம். அவரது மனைவி யோகேஸ்வரி(வயது 28) நிறைமாத கர்பிணியான யோகேஸ்வரிக்கு பிரசவலி“ ஏற்பட்டுள்ளது.இதனைதொடர்ந்து அதிகாலை 1மணிஅளவில் பிரசவ வலி காரணமாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரவு சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு காலை குழந்தை இறந்து பிறந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் தற்போது வரை மருத்துவர்கள் குழந்தை இறந்தது குறித்து தகுந்த தகவல் அளிக்கவில்லை. இதனால் நாங்கள் காலை 6மணி முதல் நான்கு மணி நேரமாக காத்திருப்பதாக கூறி ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவ மனையை முற்றுகை யிட்டனர். இந்நிலையில் மருத்துவ மனை சார்பில் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பட்டது. அதன் பேரில் அங்கு வந்த சேலையூர் காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் பேச்சு வார்த்தை நடத்தபட்டதில் போராட்டம் கைவிட பட்டு கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.