தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள் மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல்

TOP-3 இந்தியா முக்கிய செய்தி

புதுடெல்லி, நவ.27: தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளுரில் மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த கல்லூரிகளில் தலா 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதன் மூலம் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து மொத்த இடங்களின் எண்ணிக்கையும் 4,600 ஆக அதிகரித்து உள்ளது. இந்த கல்லூரிகளுக்காக ரூ.325 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மருத்துவக் கவுன்சில் தொழில்நுட்பக்குழு ஏற்கனவே மேற்கண்ட மூன்று மருத்துவக்கல்லூரிகளை அமைக்க அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு தற்போது சுகாதார அமைச்சகமும் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதன் மூலம் அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதிய மாவட்டங்களைத் தவிர பிற எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.