சென்னை, நவ.27: உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் நாளை காலை மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார்.அதன்அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று இருந்த நிலையில் நாளை மாநில தேர்தல் ஆணையம் அனைத்துக்கட்சிகளுக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கான அழைப்பை விடுத்து இருக்கிறது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. முக்கியமாக இந்த அறிவிப்பு, வருகின்ற டிசம்பர் மாத தொடக்கத்தில் 2-ம் அல்லது 3-ம் தேதிகளில் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் நாளை காலை 11.30 மணியளவில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக , காங்கிரஸ் போன்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

முக்கியமாக கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் வார்டு வாரியாக இடஒதுக்கீட்டை முறையாக கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத ஒரு சூழல் ஏற்பட்டு அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டது. ஆகையால் தற்போது அதுபோன்ற பிரச்சனைகள் எழுந்துவிட கூடாது, மேலும், வார்டு வாரியாக சரியான இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்கப்படுகிறதா மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தக்கூடிய இடங்கள், வாக்குசீட்டு பயன்ப்படுத்தக்கூடிய ஊராட்சிகல் குறித்த பல்வேறு விஷயங்கள் பற்றி கட்சிகளின் பிரதிநிதிகள், தங்களுடைய கருத்துக்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரிடம் தெரிவிப்பார்கள், இவை அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆகவே தேர்தல் நடத்துவதற்கான ஒரு ஆயத்தப்பணியாக அடுத்த கட்டமாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கான அழைப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விடுத்துள்ளது.