சென்னை, நவ.27: கீழ்க்கட்டளையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). இவர், தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். நேற்றிரவு வேலை முடிந்து துரைப்பாக்கம்- குரோம்பேட்டை ரேடியல் சாலையில் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென நிலைத்தடுமாறி சாலை தடுப்பின் மீது மோதி கீழே விழுந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சென்று பார்க்கையில், சுரேஷ் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.