சென்னை, நவ.27: கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிவருபவர் ஜான் பென்ஜமின். இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் காரில் சென்றுக்கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிரே வந்த ஆட்டோ இவரது காருக்கு வழிவிடாமல் இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக எழுந்த தகராறில், ஆட்டோ டிரைவர் நந்தகோபால் (வயது 26), ஜான் பென்ஜமினை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த கோடம்பாக்கம் போலீசார் நந்தகோபாலை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.