மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு அமைச்சர் வீரமணியிடம் வாழ்த்து பெற்றார்

தமிழ்நாடு

வேலூர், நவ. 27: சத்துவாச்சாரியில் உள்ள இந்து அறநிலையத் துறை மாவட்ட அரங்காவலர் குழு தலைவராக ஜெயப்பிரகாசம் மற்றும் உறுப்பினர்களாக பாலசுந்தரம், ராஜா, உமா ஆகியோர் பதிவு ஏற்றுக் கொண்டனர் அதனைத்தொடர்ந்து துறை அமைச்சர் வீரமணியிடம் வாழ்த்து பெற்றனர். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு அமைச்சர் வீரமணி முன்னிலையில் இந்து அறநிலையத் துறை மாவட்ட அரங்காவலர் குழு தலைவராக ஜெயப்பிரகாசம் உறுப்பினர்களாக பாலசுந்தரம் ராஜா உமா ஆகியோர் பதிவு ஏற்றுக் கொண்டு வாழ்த்து பெற்றனர் . இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் மாரிமுத்து, வேலூர் ஆவின் தலைவர் வேலழகன், அதிமுக மேற்கு மாவட்ட கழக பொருளாளர் மூர்த்தி, அதிமுக வேலூர் ஒன்றிய கழக செயலாளர் கர்ணல் மற்றும் அதிமுக நிருவாகிகள் பலர் கலந்து கொண்டனர்.