மும்பை, நவ.27: தேசியவாத காங்கிரசை பிளவுபடுத்த அஜித் பவார் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து அவருக்கு சிவசேனை சவால் விடுத்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:- சரத்பவார் இருமுறை காங்கிரசில் இருந்து விலகியவர். ஆனால் அவர் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கிறார். ஆனால் அவரது குடும்பத்தை சேர்ந்த அஜித்பவார் கட்சியில் இருந்து சில ஆவணங்களை திருடிச்சென்று தனக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக பொய் கூறியிருக்கிறார்.

அவரால் தனிக்கட்சி ஆரம்பித்து நிலைத்து நிற்க முடியுமா? முடிந்தால் தனிக்கட்சி ஆரம்பித்து பார்க்கட்டும் என சிவசேனையின் பத்திரிகையான சமனாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மனம்மாறிய அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரசில் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது தெரியவில்லை. 3 கட்சி கூட்டணி அமைச்சரவையில் அஜித்பவார் இடம் பெற மாட்டார் என்றே தெரிகிறது.