லாரன்ஸ் நற்பணி மன்றத்தினர் கமிஷனரிடம் புகார்

சென்னை

சென்னை, நவ.27: ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சங்கர் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், சமூக வலைதளங்களிலும், இணையங்களிலும் நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் போலி ஐடிக்கள் உள்ளன. இவற்றை தவறான முறையில் பயன்படுத்தி பணம் வசூலிக்கப்படுகிறது. லாரன்ஸின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் இவ்வாறு போலி ஐடிக்கள் உருவாக்கி, பணம் வசூலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.