காஞ்சிபுரம், நவ.27: காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த வேடபாளையம் பகுதியில் விவசாய நிலத்தின் பாதையை உத்தரமேரூர் நீதிமன்றத்திற்காக ஒதுக்கப்பட்டதால் விவசாய நிலத்திற்கு செல்ல வழியில்லாமல் விவசாயிகள் பாதை கேட்டு உத்தரமேரூர், வந்தவாசி சாலையில் வண்டி மாடுகளுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் உத்திரமேரூர் அடுத்த வேடபாளையம் கிராமத்தில் பல தலைமுறைகளாக விவசாய நிலத்திற்கு செல்ல ஆறு கிராம மக்கள் பொதுப் பாதையை பயன்படுத்தி வந்தார்கள். இந்நிலையில்இ உத்திரமேரூர் நீதிமன்றத்திற்காக மாவட்ட நிர்வாகம் நிலத்தை ஒதுக்கியது.

அந்த நிலத்தில் வேடபாளையம், பூந்தண்டலம், பெண்ணலூர் உட்பட்ட 6 கிராமத்திற்கான விவசாயத்திற்கு செல்லக்கூடிய பொதுப்பாதை அடங்கியது. தற்போது விவசாய நிலத்திற்கு செல்லக்கூடிய பாதை நீதிமன்ற நிலத்திற்கு ஒதுக்கப்பட்டதால் விவசாய நிலத்திற்கு செல்லமுடியாமல் கிராம மக்கள் அவதி அடைந்தனர். தற்போது விளை நிலங்களில் பயிரிட்ட பயிரை அறுவடை வாகனங்களை விளைநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். எனவே விவசாயம் செய்வதற்கு செல்ல புதிய பாதை ஏற்படுத்தி தருமாறு மாவட்ட நிர்வாகத்திடம் சில மாதங்களாக விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

மாவட்ட நிர்வாகம் இதை கண்டுகொள்ளாமல் இருந்ததால் தற்போது 6 கிராமங்களைச் சார்ந்த விவசாயிகள் உத்திரமேரூர் ,வந்தவாசி சாலையில் வண்டி மாடுகளுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால்அந்தபகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.