மும்பை, நவ.27: உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மகாராஷ்டிரா புதிய சட்டமன்றம் இன்று காலை 8 மணிக்கு கூடியது. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட பிஜேபியை சேர்ந்த் காளிதாஸ் கோலம்கர் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பதற்காக சட்டசபைக்கு வந்த முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரை, சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே கட்டிதழுவி வரவேற்றார். அஜித் பவாரிடம் நீங்கள் தேசியவாத காங்கிரசுக்கு திரும்பி வந்து விட்டீர்களா என்று கேட்டதற்கு, நான் கட்சியை விட்டு எங்கே போனேன் திரும்பி வருவதற்கு, தேசியவாத காங்கிரசில் தானே இருக்கிறேன் என்று கூறினார். சரத் பவாரின் மகன் பரத்பவாரும் சட்டமன்ற வளாகத்தில் நின்று தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களை வரவேற்றார், மாலை 5 மணிக்குள் பதவியேற்பு நிகழ்ச்சி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரும், துணை முதல்வரும் ராஜினாமா செய்து விட்டதால் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது.