பிரதமரை சந்திக்க திட்டம்: பாத்திமாவின் தந்தை லத்தீப்

சென்னை

சென்னை, நவ.27: பிரதமர் மோடியை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தற்கொலை செய்துக்கொண்ட ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், தாய் சஜீதா மற்றும் சகோதரி ஆயிஷா, ஆகியோர் தடயவியல் துறையின் விசாரணைக்காக இன்று சென்னை வந்துள்ளனர்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த லத்தீப் கூறுகையில், பாத்திமா பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்பை தடயவியல் நிபுணர்கள் இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் சோதனை மேற்கொள்கின்றனர். அவற்றை எங்கள் முன்னிலையில் சோதனையிட வேண்டும் என்று கோரி நீதிமன்ற அனுமதி பெற்றிருந்தோம். அதன்படி, இன்று சென்னைக்கு வந்துள்ளோம். மேலும், பாத்திமா மரணம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளோம் எனவும் கூறினார்.