தடுப்பணை-பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம் தலைமைச்செயலர் நேரில் ஆய்வு

தமிழ்நாடு

சிதம்பரம், நவ.27: கடலூர் ஊராட்சி ஒன்றியம் விலங்கல்பட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை தலைமைச் செயலாளர் க.சண்முகம், கலெக்டர் வெ.அன்புச்செல்வன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் ஊராட்சி ஒன்றியம் விலங்கல்பட்டில் கெடிலம் ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் மூலம் ரூ.12.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் தடுப்பணை பணிகளை தலைமைச் செயலாளர்க.சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலாவில் ஒட்டுக்கட்டும் முறைகள், காய்கறிகள் ஒட்டுக்கட்டும் முறைகள், பலாவில் மதிப்புகூடுதல் செய்தல் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், துணை கலெக்டர் (பயிற்சி) ஷாகிதா பர்வீன், உதவி இயக்குநர் (வேளாண்மை) பூவராகன், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) செயற்பொறியாளர்கள்சாம்ராஜ், மணிமோகன் மற்றும் பலர் உள்ளனர்.