100ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது சீனிவாச அகாடமி சார்பில் நடந்த கவுரவிப்பு விழா

சென்னை

சென்னை, நவ.27: சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 100 ஆசிரியர்களுக்கு சீனிவாச அகாடமி சார்பில் சிறந்த ஆசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். சென்னையில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற விழாவில், இளம் மனதைப் பயிற்றுவிப்பதில் பங்களித்ததற்காக நகரத்தின் பல பள்ளிகளின் ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர். சீனிவாச அகாடமி ஏற்பாடு செய்துள்ள சிறந்த ஆசிரியர் விருது 2019, பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் பெற உதவி செய்த அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்ட தன்னலமற்ற மற்றும் தடையற்ற முயற்சிகளை அங்கீகரிப்பதாகும். சீனிவாச அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் வித்யா ஸ்ரீகாந்த் கூறுகையில், ஒவ்வொறு துறை வளர்ச்சிக்கு ஆசிரியரின் பங்கு மிகுதியாக இருக்கிறது. எனவேதான் ஆசிரியர்கள் இந்த விழாவில் அங்கிகரிக்ப்பட்டனர்.

பேராசிரியர் பி.ஜகதீசன், வேல்ஸ் பல்கலைக்கழக வணிகத் துறைத் தலைவர், ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அண்ணா ஆதர்ஷ், வேளச்சேரி டி.ஏ.வி பள்ளி, சீதா தேவி கரோடியா உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விருதுக்கான ஆசிரியர்களை பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வாக்குகள் மூலம் தேர்வு செய்தனர். சீனிவாச அகாடமி பட்டய கணக்கியல் மற்றும் செலவு மேலாண்மை கணக்கியல் தேர்வுகளுக்கான தொழில்முறை பயிற்சி அகாடமி ஆகும். சீனிவாச அகாடமியில் அசோக் நகர், தம்பரம் மற்றும் வேளச்சேரியில் கிளைகள் உள்ளன.