தாம்பரம், நவ.27: பருவநிலை மாற்றம் மற்றும் கொசுக்களால், சில மாதங்களாக மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை சார்பில், டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு குறித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழைக்கு பின் கொசு தொல்லை அதிகரித்துள்ளதால் தொழில் அதிபரும், சமூக ஆர்வலர்மான எஸ்.பி.எபினேஜர், ரீனா எபினேஜர் சொந்த செலவில் வாங்கபட்டு பல்லாவரம் 36 வார்டு குட்பட்ட நல்லப்பா தெரு, வரதராஜன் தெரு, அய்யாசாமி தெரு, பட்டேல் தெரு ஆகிய பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பனியை பட்டேல் தெரு நலச்சங்கம் செயலாளர் கோவிந்தராஜன், நல்லப்பா தெரு ஸ்ரீதர் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.