கடந்த 2007-ல் தெலுங்கில் ‘யமதொங்கா’ எனும் பிரமாண்ட திரைப்படத்தை எஸ்.எஸ் ராஜ மௌலி இயக்கியிருந்தார். இதில் ஜுனியர் என்.டி.ஆர் கதாநாயகனக நடித்திருந்தார். அவருடன் குஷ்பு, ப்ரியாமணி, மம்தா, மோகன்தாஸ், ரம்பா மற்றும் பலர் நடித்திருந்தனர். விஜயேந்திர பிரசாத் கதை எழுத , மரகதமணி இசையமைத்திருந்தார். கே.கே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார் . இவர்கள் அனைவரும் நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் பணியாற்றிய வெற்றிக்கூட்டணியாகும்.
12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் மொழியில் தற்போது டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது . ஏஆர்கே ராஜராஜா தமிழில் வசனங்களை எழுதியுள்ளார்.

எஸ்.எஸ் ராஜ மௌலி தெலுங்கில் இயக்கி தமிழில் வெளிவராத ஒரே படம் யமதொங்கா. தற்பொழுது இந்த படமும் மொழிமாற்றம் செய்து தமிழில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஓம் ஸ்ரீ சப்த கன்னியம்மன் கிரியேஷன் தயாரித்து , ஓம் ஸ்ரீ முனீஸ்வரர் மூவிஸ் வெளியிட உள்ளது. டிசம்பர் 13-ம் தேதி வெளியாகிறது.