புதுடெல்லி, நவ.28: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரம் ஜாமீனில் வெளியே வந்தால் நிச்சயமாக சாட்சிகளை சேதப்படுத்தவும், கலைக்கவும் செய்வார் என்றும், அவர் காவலில் இருக்கும் போது கூட முக்கிய சாட்சிகளை கட்டுப்படுத்தி வருவதாகவும் அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.