சென்னை, நவ.28: தென்னந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தலைவர் நடிகர் ராதாரவி மீதான புகார் குறித்து விசாரணை நடத்த தொழிற்சங்க பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரிக்காத சங்கத்தின் தலைவர் ராதாரவி மற்றும் செயலாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக்கோரி சங்க உறுப்பினர்கள் மயிலைகுமார், காளிதாஸ் உள்ளிட்ட மூன்று பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழகக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், டப்பிங் ஆர்டிஸ்ட் சங்க தலைவர் ராதாரவிக்கு எதிராக கொடுத்துள்ள புகாரின் மீது விசாரணை நடத்தும்படி தொழிற்சங்க பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.