கொழும்பு, நவ.28: இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை அந்நாட்டின் வடக்கு மாகாண கவர்னராக, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமிக்க உள்ளார் என்னும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது! இந்த மாத தொடக்கத்தில் பொறுப்பேற்ற இலங்கை அதிபரின் புதிய அரசாங்கத்தால் நியமிக்கப்படவுள்ள மூன்று புதிய கவர்னர்களில் இவரும் ஒருவராக இருப்பார் என கூறப்படுகிறது. வடக்கு மாகாண கவர்னர் பதவியை ஏற்குமாறு முரளிதரனை ஜனாதிபதி ராஜபக்ஷ தனிப்பட்ட முறையில் அழைத்ததாக டெய்லி மிரர் வட்டாரங்களை மேற்கோளிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும், அனுராதா யஹம்பத் கிழக்கு மாகாண ஆளுநராகவும், திஸ்ஸா விதானா வட மத்திய மாகாண ஆளுநராகவும் பொறுப்பேற்பார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.