ஆலோசனைக் குழுவில் இருந்து சாத்வி நீக்கம்

இந்தியா

புதுடெல்லி, நவ.28: பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து சாத்வி பிரக்யா நீக்கப்பட்டுள்ளார். பிஜேபி எம்பி சாத்வி பிரக்யா தாகூர் நாடாளுமன்றத்தில் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சாத்வி பிரக்யா தாகூரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், சாத்வி பிரக்யா தாகூர் கருத்துக்கு பிஜேபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிஜேபி செயல் தலைவர் ஜேபி நட்டா கூறுகையில், சாத்வி பிரக்யாவின் கருத்து கண்டனத்திற்குரியது. பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் இருந்து சாத்வி பிரக்யா தாகூர் நீக்கப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.