‘தம்பி’ படத்தை வாங்கிய எஸ்டிசி பிக்சர்ஸ்

சினிமா

சமீபத்தில் பட விநியோகத்தில் கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்த எஸ்டிசி பிக்சர்ஸ் நிறுவனம் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம், காவியன் ஆகிய படங்களை வெளியிட்டனர். சேரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’, திரிஷாவின் ‘கர்ஜனை’ ஆகிய படங்களை வெளியிட இருக்கிறார்கள். இதற்கிடையில் கார்த்தியின் ‘தம்பி’ படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டு அப்படத்தின் தமிழ்நாட்டு தியேட்டரிகல் உரிமையை வாங்கி உள்ளனர். பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்ட நிலையிலும் ‘தம்பி’ படத்தை எஸ்டிசி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.