எல்லா சாதனைகளையும் முறியடித்த ‘தர்பார்’ பாடல்

சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் தர்பார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் சிங்கிள் ட்ராக் நேற்று வெளிவந்தது, இவை பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது. நேற்று வெளியான சும்மா கிழி பாடல் தற்போது வரை 5.5 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் இடம் பெற்ற ‘வெறித்தனம்’ பாடலின் சாதனையை சும்மா கிழி பாடல் முறியடித் துள்ளது. தொடர்ந்து பிற்பகல் வரை 6 மில்லியனை தாண்டியதால் இது வரை உள்ள அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடித்து தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். அவர்களுடன் நிவேத்தா தாமஸ், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.