திமுக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

குற்றம் சென்னை

சென்னை, நவ.29: சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு 8.30 மணியளவில் ஒரு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், அண்ணா அறிவாலயத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு செய்தபோது, வெடிகுண்டு மிரட்டல், வெறும் புரளி என்பது உறுதியானது. இதனிடையே, அந்த செல்போன் எண்ணை கண்டறிந்து ஆய்வு செய்ததில், தி.நகர் எஸ்.பி. கார்டன் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 37) என்பவர்தான் போன் செய்துள்ளார் என தெரியவந்தது. இதனையடுத்து, இன்று அதிகாலையில் கணேசனை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால், விரக்தியடைந்து செய்வதறியாது இவ்வாறு போன் செய்துவிட்டதாக கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.