பெருசுகளின் லொல்லை சொல்லும் ‘சியான்கள்’

சினிமா

கேஎல் புரொடக்ஷன் சார்பில் ஜி.கரிகாலன் தயாரித்துள்ள படம் ‘சியான்கள்’. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கடிகார மனிதர்கள் என்ற படத்தை இயக்கியவர். வயது முதிர்ந்த, நம் கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, மண் மனம் மாறமல் படமாக்கி உள்ளார். இதில் கரிகாலன் கதையின் நாயகனாகவும், ரிஷா ஹரிதாஸ் நாயகியாகவும் நடிக்க, நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் பங்கேற்ற இயக்குநர் வைகறை பாலன் கூறியதவாது:- வயதான அப்பா, அம்மா நம் எல்லோருக்கும் இருப்பார்கள் அவர்களை நாம் எப்படி பார்த்துகொள்ள வேண்டும் என்பதை நம் கிராமத்து மண் சார்ந்து கூறும் படைப்பாக சியான்கள் படம் இருக்கும். இப்படத்தில் உண்மையில் நடந்த பல சம்பவங்கள் தொகுத்து அதனை கதையில் சேர்த்திருக்கிறேன். சியான்கள் கிராமத்து பக்கம் முதியவர்களை அழைக்கும் ஒரு வழக்கு சொல். இப்படம் இளைஞர்களுக்கும் பிடிக்கும் என்றார். படத்திற்கு முத்தமிழ் இசையமைக்க, பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவீஸ் கலையமைக்க மப்பு ஜோதி பிரகாஷ் எடிட்டிங் மேற்கொள்கிறார்.