2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் புதிய பட பூஜை சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் நேற்று நடைபெற்றது. இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி கூட்டணியில் சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள்.

கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகிறது. இயக்குநர் இரா.சரவணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்கிறார். ரூபன் எடிட்டிங் பணியைக் கவனிக்க, முஜூபுர் ரஹ்மான் கலை அமைக்கிறார். இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.