பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் பென்ஜமின் வழங்கினார்

சென்னை

தாம்பரம், நவ.29: தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காஞ்சி மாவட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பென்ஜமின் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் 222 குழுக்கள் உதவியுடன் சிறப்பு குறைத்தீர்வு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித் தொகை,கல்வி உதவித் தொகை,ஊனமுற்றோர் உதவித் தொகை, பட்டா மாற்றம்,பசுமை வீடுகள், வீட்டுமனைப் பட்டா, தனிநபர் கழிப்பிடம், குடும்ப அட்டை, நலத்திட்ட உதவிகள் தொடர்பான 86,892 மனுக்கள் பெறப்பட்டன.

முதற்கட்டமாக ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் வட்டங்களுக்குட்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பா.பென்ஜமின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பி,பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் என்.சுந்தரமூர்த்தி, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சி.ராஜ்குமார், தாம்பரம் நகராட்சி ஆணையர் கருப்பையா ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.