ஏமனிலிருந்து தப்பிய தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பவர்களை மீட்க நடவடிக்கை

இந்தியா

கொச்சி, நவ.29: ஏமன் நாட்டில் பணியாற்ற சென்ற இடத்தில் ஏமாற்றப்பட்டதால் அங் கிருந்து 9 இந்திய மீனவர்கள் படகில் தப்பி கடந்த 10 நாட்களாக நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரிய வந்துள்ளது. இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 7 பேர் என்றும், கேரளா வைச் சேர்ந்தவர்கள் 2 பேர் என்றும் தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த் வின்ஸ்டன் (வயது 47), அல்பர்ட் நியூட்டன் (வயது 23), அமல் விவேக் (வயது 33), வெ.சாசன் (வயது 24), எஸ் சகாய ஜெகன் (வயது28) மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சகாய ரவிக்குமார் ஆகியோரும், கேரளாவைச் சேர்ந்த இருவரும் ஏமன் நாட்டில் பணியாற்ற சென்றனர்.

அங்கு சுல்தான் என்பவரிடம் பணியாற்றிய இவர்களுக்கு ஒரு மாதமாக சம்பளம் கொடுக்கவில்லை. கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்ட இந்த மீனவர்கள் எஜமானர்களுக்கு சொந்தமான படகை எடுத்துக்கொண்டு இந்தியா திரும்பி வருவதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 3000 கிலோ மீட்டர் தொலைவை கடந்த இவர்கள் கொச்சி யை நோக்கி பயணித்துக் கொண்டிருப்ப தாக கூறப்பட்டது. ஆனால் 10 நாட்களாகியும் இதுவரை கரைக்கு வந்து சேரவில்லை. இது குறித்து உறவினர்களும், குடும்பத்தினரும் மீனவர் சங்கத்தின் மூலம் மாவட்ட நிர்வாகத்தை அணுகி உள்ளனர். இதை தொடர்ந்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

கடைசியாக அந்தமான் கடலோரத்தில் இதுபோன்ற ஒரு படகை கண்டுபிடித்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கல்பேனி என்ற இடத்தில் கொச்சி துறைமுகத்தில் இருந்து 117 நாட்டிகல் மைல் தூரத்தில் அந்த படகு நின்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தூதூரைச் சேர்ந்த மீனவர் சர்வதேச நல அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் அந்தோணி கூறுகையில், 2 வாரத்திற்கு முன் குளச்சலை சேர்ந்த மீனவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏமனில் படும் கஷ்டங்களை தெரிவித்தார். நான் மேற் கொண்டு விவரங்களை கேட்டேன். அதன் பிறகு அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்றார்.