சென்னை,நவ. 29: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடவூர் அருகே மயிலம்பட்டி என்ற கிராமத்தில் ஒரு தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக திருச்சி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அறுவடைக்கு தயாரா க இருந்ததை கண்டுஅழித்தனர். இது தொடர்பாக தங்கவேல் மற்றும் முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் தேனியைச் சேர்ந்த கர்ணன், சின்னகருப்பு என்ற வேலுத்தேவர் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.