புதுவை, நவ.29: புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திவந்த புரோக்கர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து, 2 வடமாநில பெண்களை மீட்டனர். புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக பாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், கிருமாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கௌதம், சப்-இன்ஸ்பெக்டர் சிவாகணேஷ் தன்வந்திரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, புரோக்கர்களான கடலூரை சேர்ந்த தனுஷ் (வயது 46), அவரது சகோதரர் வடலூரை சேர்ந்த செல்வம் (வயது 38), புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (வயது 49), பலநூறு குமார குப்பத்தை சேர்ந்த சரவணன் (வயது 30) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்த வடமாநில பெண்கள் இருவர் மீட்கப்பட்டு புதுவை காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.