சென்னை, நவ.30: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ160 உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபரில் வரலாறு காணாத வகையில், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலையில் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.29,168 ஆக விற்பனை செய்யப்பட்டது.