ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து வீரர் பலி

உலகம்

மெக்சிகோ சிட்டி, நவ.30: உலகப்புகழ்பெற்ற மலையேற்ற வீரரான பிராட் காப்ரைட் மலையிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் பிரிட் காப்ரைட். இவர் எந்த வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மலையேறுவதில் வல்லவரான இவர் உலக அளவில் புகழ்பெற்ற மலையேற்ற வீரராக திகழ்ந்து வந்தார்.

இந்நிலையில் பிராட் காப்ரைட்டும் அவரது நண்பரும் சக மலையேற்ற வீரருமான அய்டன் ஜேக்கப்சன் ஆகிய இருவரும் மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ‘எல் பொட்ரெரோ சிக்கோ’ என்ற மலையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஏறினர். அப்போது பிராட் காப்ரைட் மலையின் உச்சியை நெருங்கிய நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.