சென்னை, நவ.30: ரஷ்யாவின் மாஸ்கோவில் திறம்பட தங்கள் உணவு தொழிலை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்த டாக்டர் நைஜெல் மற்றும் டாக்டர் ராம் குமார் ஆகியோர் சென்னையில் தங்கள் உணவு விடுதியை துவக்கி உள்ளனர். சுவையான தரமான உணவைத் தேடிச் சாப்பிடும் சென்னையின் உணவுப் பிரியர்களின் சுவை மொட்டுகளை திருப்தி படுத்த பலவகையான இந்திய மற்றும் உலகின் பிரபலமான உணவுகளை சர்வதேசிய தரத்திலும் சுவையிலும் தயாரித்துக் வழங்க சென்னை டிடிகே சாலையில் ‘தி 16 டன்ஸ்’ என்ற உணவகத்தை துவக்கியுள்ளனர்.

இந்தியா மற்றும் தாய்லாந்தின் பாரம்பரிய மற்றும் அனைத்து வகை உணவுகளையும் சுவை மாறாமல் அனுபவமிக்க சமையல் நிபுணர்கள் மூலம் தயாரித்துக் கொடுக்கின்றனர்.தாய்லாந்திலிருந்து வாரத்திற்கு மூன்று தாய்லாந்து மசாலாக்களை வரவழைத்து உணவுகளைத் தயாரிக்கிறோம் என்று இதன் நிறுவனர்கள் கூடுதல் சமையல் ரகசியங்களையும் தெரிவிக்கின்றனர்.