சமூக வளர்ச்சிக்கு நானோ தொழில் முக்கிய பங்கு விஐடி கருத்தரங்கில் வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு

தமிழ்நாடு

வேலுர், நவ.30: எதிர்காலத்தில் நாம் நானோ தொழில்நுட்பத்தை தான் சார்ந்து இருப்போம். சமூக வளர்ச்சிக்கு நானோ தொழில்நுட்பம் முக்கிய பங்கு வசிக்கிறது என்று விஐடி வேந்தர் ஜி. விசுநாதன் பேசினார். வி ஐ டியில் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் சார்பில் , நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

கருத்தரங்கை இஸ்ரேலில் உள்ள விஸ்மேன் அறிவியல் மையத்தின் இயக்குனரும், வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெற்ற டாக்டர். அடா இ யோனத் துவக்கி வைத்தார். கருத்தரங்கை  துவக்கி வைத்து பேசுகையில், மாணவ, மாணவிகள் ஆராய்ச்சியில் பெரும் அளவில் ஈடுபட வேண்டும். குறிப்பாக பெண்கள் அதிகளவில் ஆராய்ச்சியில்  கவனம் செலுத்த வேண்டும் என்றார். கருத்தரங்கில் வி ஐ டி வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன் பேசியதாவது.

எதிர்காலத்தில் நாம் நானோ தொழில்நுட்பத்தை தான் சார்ந்து இருப்போம். சமூக வளர்ச்சிக்கு நானோ தொழில்நுட்பம் முக்கிய பங்கு வசிக்கிறது. பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் நானோ தொழில்நுட்பம் மூலம் மிக சிறிய அளவில்வடிவமைக்கப்பட்டு  நாம் பயன்படுத்த முடியும். வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பங்களை நாமும் பயன்படுத்த கற்று கொள்ள வேண்டும், அதன் மூலம் நாமும் வளரலாம் எனக் கூறினார்.

இந்த கருத்தரங்கில் அமெரிக்காவின் டிரக்ஸ்எல் பல்கலைக்கழகத்தின், நானோ மெட்டிரியல்ஸ் மையத்தின் இயக்குனர் டாக்டர். யூரி கோகாட்சி, கேரளாவின் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர். சபு தாமஸ் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், இங்கிலாந்து, ஸ்பெயின் உட்பட 13 நாடுகளை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த கருத்தரங்கில் பங்கு பெற்றனர்.

முன்னதாக வி ஐ டியின் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர். நிர்மலா கிரேஸ் கருத்தரங்கை பற்றி விளக்கி கூறினார். வி ஐ டி துணை வேந்தர் டாக்டர்.ஆனந் ஆ சாமுவேல் அனைவரையும் வரவேற்றார். வி ஐ டி இணை துணை வேந்தர் டாக்டர். எஸ். நாராயணன், பதிவாளர். டாக்டர். கே.சத்திய நாராயணன் , பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.