சென்னை, நவ.30: சர்வதேச சமூகத்திலிருந்து இதுவரை கிடைத்துவந்த நிதியுதவி குறைந்து வருகின்ற நிலையில் உள்நாட்டிலேயே நிதிதிரட்டுவதற்கான முயற்சியை வலுவாக அதிகரித்து வருகின்ற நிலையில், உள்நாட்டு நிறுவனங்களிலிருந்து நன்கொடையை பெருவதற்காக தங்களது செயல்முயற்சிகளை உள்நாட்டு என்ஜிஓக்கள் (தொண்டு நிறுவனங்கள்) மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளன.

சென்னையில் உள்ள வைல்டு கேன்சன்’ஸ் சேஞ்ச் தி கேம் அகாடமியின் ஒத்துழைப்போடு ஸ்மைல் ஃபவுண்டேஷன், நவம்பர் 26-ம் தேதியிலிருந்து, 30-ம் தேதி வரை நடத்துகின்ற 5 நாட்கள் பயிலரங்கானது, உள்நாட்டிலேயே நிதி திரட்டுகின்ற பணியை எப்படி திறம்பட மேற்கொள்ள முடியும் என்று அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் அறிந்துகொள்வதற்கு உதவ முற்படுகிறது.
இதுகுறித்து ஸ்மைல் ஃபவுண்டேஷனின் இணை நிறுவனரும், அறங்காவலருமான சாந்தனு மிஸ்ரா கூறுகையில், சமீபத்தில்தான், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் என்பதன் விதிமுறைகளை மீறிய குற்றசாட்டின் பேரில் வெளிநாடுகளிலிருந்து நிதிகளைப் பெறுவதிலிருந்து 1800 அரசுசாரா தொண்டு நிறுவனங்களை இந்திய அரசு தடை செய்திருக்கிறது.

இத்துறையில் 16 ஆண்டுகளுக்கும் அதிகமான எங்களது அனுபவத்தில், இந்த நிதிகளை கையாள்வது எப்படி என்ற அடிப்படை விதிமுறைகள் மீதான அறிவு சிறிய அமைப்புகளுக்கு இல்லை என்று பெரும்பாலான நேரங்களில் நாங்கள் உணர்ந்திருக்கிறோம் எனவே உள்நாட்டிலேயே நிதிகளை பெருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக இந்த பயிலரங்கு நடத்தப்படுகிறது என்று கூறினார்.