திருச்சி, நவ.30: மணப்பாறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்தள்ள சார்பு நீதிமன்றத்தினை முதன்மை மாவட்ட நீதிபதி கே.முரலிசங்கர் திறந்து வைத்தார். புதிய சார்ப் நீதிமன்றத்தின் முதல் சார்பு நீதிபதியாக வி.ஆனந்தன் பதவியேற்று நீதிமன்ற வழக்கு நடைமுறைகளை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் சு. சிவராசு,காவல் கண்காணிப்பாளர் (பொ)டாக்டர் பி. வி. அருண் ,சக்திகுமார், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கே. செங்குட்டுவன், வழக்கறிஞர் கே. நாகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். 2வது கூடுதல் மாவட்ட நீதிபதி என். குணசேகரன் வரவேற்று பேசினார்.