காஞ்சிபுரம், நவ.30: காற்று மாசுபாட்டை தடுத்து நிறுத்த காலநிலை அவசர பிரகடனம் செய்ய வலியுறுத்தி பசுமை தாயகம் சார்பில் உத்தரமேரூர் தனியார் கல்லூரி மாணவிகளுக்கு இன்று காலை விழிப்புணர்வு துண்டு பிரசுரம் . வழங்கப்பட்டது. காற்று மாசுபாட்டை தடுத்து நிறுத்த காலநிலை அவசர நிலை பிரகடனம் செய்ய வலியுறுத்தி பசுமை தாயகம் சார்பில் மாவட்ட செயலாளர் செல்வக்குமார் தலைமையில் உத்தரமேரூர் தனியார் கல்லூரி மாணவிகளுக்கு பாமக மாவட்ட செயலாளர் உமாபதி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் தனசேகரன். குப்பன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆறுமுகம். மாநில அமைப்பு துணை செயலாளர் கருணாகரன் உடையார் . மனோகரன்,நகர செயலாளர்கள் ரவிச்சந்திரன். ஸ்ரீதர், ராஜா. மற்றும் நிர்வாகிகள் அரசு.ராபின் பிரேம் குமார். அய்யனார், மாரி, கன்னியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.