மும்பை, நவ.30: மகாராஷ்ட்ராவில் பாலத்தில் இருந்து ஜீப் கவிழ்ந்து விழுந்து நிகழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் வின்ச்சூர் அருகே உள்ள ஆற்றின் பாலம் ஒன்றில் இருந்து ஜீப் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில் 7 பேர் பரிதாபாமக உயிரிழந்துள்ளனர். மேலும், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளனர். காயமடைந் தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுதிக்கப் பட்டுள்ளனர்.