எஸ்ஆர்டி எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் படத்தில் பாபிசிம்ஹா ஹீரோவாக நடிக்கிறார். பாபிசிம்ஹாவிற்கு ஜோடியாக நடிகை காஷ்மீரா பர்தேஷி நடிக்கிறார். இப்படத்தை ரமணன் புருஷோத்தமா எழுதி இயக்குகிறார். படத்துக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பொறுப்பை சுனில்ஷிரி ஏற்றுள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு சென்னையில் துவங்கியது. இதன் துவக்க விழாவில் படக்குழுவினர் உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.