அம்மன்யா மூவிஸின் புரடக்ஷன் சார்பில் சார்பில் சி.வி மஞ்சுநாதன் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை டி.ஆர் கார்டனில் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் ஆரி நாயகனாக நடிக்கிறார். எஸ்.காளிங்கன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இவர் என்றென்றும் புன்னகை, ரிச்சி போன்ற படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்திற்கு முருக சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன் இசை அமைக்க, படத்தொகுப்பை அதுல் விஜய் கவனிக்கிறார்,கலை இயக்குனராக அமரன் பணியாற்றுகிறார்.

இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சி.வி மஞ்சுநாதன் கூறுகையில் தமிழ் சினிமாவில் மித்தலாஜிக்கல் திரைப்படங்கள் அதிகமாக வரவில்லை. அதை இந்த படம் நிவர்த்தி செய்யும். இதில் முதன்முறையாக ஆரி மித்தலாஜிக்கல் பீரியட் பிலிமில் நடிக்கிறார். இப்படத்திற்காக ஆரி தனது உடல் எடையை 10 கிலோ வரை குறைத்து வருகிறார். இப்படம் அவருக்கு மிக முக்கிய படமாக அமையும். நாயகியாக ஐதராபாத்தைச் சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிக்கிறார் மேலும் யோக் ஜேபி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றார்.