டிச.27,30-ல் ஓட்டுப்பதிவு வேட்புமனு தாக்கல் வரும் 6-ம் தேதி துவக்கம்: ஜனவரி 2-ல் வாக்கு எண்ணிக்கை

TOP-1 அரசியல் சென்னை முக்கிய செய்தி

சென்னை, டிச.2: தமிழக உள்ளாட்சி தேர்தல் டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி அறிவித்துள்ளார். கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி டிசம்பர் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என, அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் கட்சித் தொண்டர்கள் வரை பலதரப்பினரும் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் . காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் . உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறும் . தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு உறுப்பினர்கள் ஜனவரி 6-ம் தேதி பதவி ஏற்றுக்கொள்வார்கள் . தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பனர்கள் ஜனவரி 11-ம் தேதி மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவரை தேர்வு செய்வார்கள் .

உளளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 6-ம் தேதி ஆரம்பம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 16-ம் தேதி வேடம்புமனு பரிசீலனை செய்யப்படும் . வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் டிசம்பர் 13 ஆகும். வேட்புமனுவை திரும்ப பெற டிசம்பர் 18 கடைசி நாள் ஆகும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மனு செய்யலாம் . கிராம ஊராட்சிகளில் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்படும் . மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு ஜனவரி 11-ம் தேதி தேர்தல் நடைபெறும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

2016-ல் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தேர்தல் 3 ஆண்டு கழித்து நடத்தப்பட உள்ளது . காரம்புறங்களில் 12,524 ஊராட்சிமன்ற தலைவர், 99,324 ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 1.31 லட்சம் பதவிகளுக்கு நேர்மூக தேர்தல் நடத்தப்பட உள்ளது என கூறப்படுகிறது. 15 மாநகராட்சி மேயர், 121 நகராட்சி, 528 பேரூராட்சி, 388 ஊராட்சி ஒன்றியக்குழு, 31 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 11-ம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் தேர்தலும் ஜனவரி 11-ம் தேதி நடைபெறும் . மொத்தம் 13,362 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் .

முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர் எனவும், 2ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர் . தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்டும் . அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் . வேட்பாளர் செலவு கிராம ஊராட்சி தலைவருக்கு ரூ. 34 ஆயிரம் . தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிட முடியாது .

ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் . 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . மேயர் பதவிக்கு நிர்வாக காரணங்களால் அறிவிப்பு வெளியிடவில்லை ,
நகரப் பகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை . ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் . மேலும் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை தேவைப்பட்டால் தேர்தலுக்கு பின் நடத்தப்படும் . இவ்வாறு அவர் கூறினார்.