சென்னை, டிச.2: பெரம்பூர் அடுத்த சர்மா நகரை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 23). கால் டாக்ஸி டிரைவரான இவர். நேற்று காலை தனது தாய் நசீமாவை பைக்கில் அழைத்துக்கொண்டு ஓட்டேரியில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, ஓட்டேரி பின்னி லேன் பகுதியில் முஸ்தபா பைக்கில் சென்றுக்கொண்டிருந்தபோது, மற்றொரு பைக்கில் வந்த 2 பேர், முஸ்தபாவை தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவரின் செல்போன் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

கீழே விழுந்த முஸ்தபாவிற்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து,¢முஸ்தபா ஓட்டேரி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை கைப்பற்றி, செல்போனுடன் தப்பியோடிய ஹெல்மெட் ஆசாமிகளை தேடிவருகின்றனர்.