பிரியங்கா சோப்ரா வாழ்க: காங். தலைவர் முழக்கம்

இந்தியா

புதுடெல்லி, டிச.2: டெல்லியில் நடந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ராவுக்கு பதிலாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை ஜிந்தாபாத் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் நடந்த பேரணியின் போது சுரேந்திர குமார், ‘சோனியா ஜிந்தாபாத்’, ‘காங்கிரஸ் ஜிந்தா பாத்’ , என்று குரல் எழுப்பிய அவர் திடீரென ‘பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்’ என குரல் எழுப்பினார்.

உடனடியாக அவரது தவறு சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து தான் கூறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவர் பின்னர் ‘பிரியங்கா ஜிந்தாபாத்’ என சரியாக குரல் எழுப்பினார். கட்சித் தலைவர் சுரேந்தர் குமாரின் முழக்கத்தை காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி மீம்ஸ் அலைகளை எழுப்பி வருகிறது.