அகமதாபாத், டிச.2: அகமதாபாத் புறநகர் பகுதியான ஹிராப்பூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் மூடப்பட்டுள்ளது. அங்கிருந்த அவரது சீடர்கள் வேறு ஆசிரமத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். அகமதாபாத் ஆசிரமத்தில் இரண்டு சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நித்யானந்தாவை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை கேட்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அகமதாபாத் போலீசார் நடத்திய விசாரணையில் ஹிராப்பூர் ஆசிரமம் ஆசிரமம் தனியார் பள்ளிக்கு சொந்தமான வளாகத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரது அகமதாபாத் ஆசிரமம் இன்று மூடப்பட்டு இருக்கிறது.