சென்னை, டிச.2: சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,627 ஆக உள்ளது. நேற்றைய தினத்தில் இதன் விலை ரூ.3,646 ஆக இருந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 29,168 ரூபாயிலிருந்து இன்று 29,016 ரூபாயாகச் சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் 152 ரூபாய் வீழ்ந்துள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு நேற்றைய விலை 30,456 ரூபாயிலிருந்து இன்று 30,304 ரூபாயாகக் குறைந்திருக்கிறது. வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 48.11 ரூபாயிலிருந்து 47.80 ரூபாயாக சரிந்திருக்கிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 48,110 ரூபாயிலிருந்து 310 ரூபாய் சரிந்து ரூ.47,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.