அரிசிக்கு பதில் வங்கியில் பணம் செலுத்த வேண்டும்

தமிழ்நாடு

புதுவை, டிச.2: புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை முன்பு பொது மக்களுக்கு ரேஷன் அரிசிக்கு பதிலாக வங்கியில் பணம் வழங்க கோரி பிஜேபியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். புதுச்சேரி மாநில பிஜேபி சார்பில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 6 மாதமாக மக்களுக்கு ரேஷன் கடை மூலம் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கவில்லை எனக் கோரி பிஜேபி மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் தட்டாஞ்சாவடி யில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக கொக்கு பார்க்கில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினார்கள் தடுப்புக் கட்டைகளை தூக்கி எறிந்து விட்டு வேகமாக சென்று குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில அரசை வலியுறுத்தியும் ஆறு மாத காலமாக ரேஷன் பொருட்களுக்கு வங்கியில் பணம் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்