உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் குழப்பம்: கம்யூ. கண்டனம்

சென்னை

சென்னை, டிச.2: தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குழப்பங்கள், குளறுபடிகள் நிறைந்தது. மோசடியானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 3 ஆண்டுகளாக சொத்தையான காரணங்ளை கூறி உள்ளாட்சி தேர்தல்களை தள்ளிப்போட்டு வந்த அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தலையீட்டின் காரணமாக வேறு வழியின்றி தற்போது தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. இவ்வறிவிப்பில் ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் முடிந்த பின்னர் நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்பது தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத நடைமுறையாகும்.
ஏற்கனவே வார்டு வரைமுறை மேற்கொண்டதில் ஏராளமான முறைகேடுகள் குறித்த புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.