சென்னை, டிச.2: சாப்ட்வேர் இன்ஜினியரை மிரட்டி, அவரின் விலையுயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடிய வழக்கில். 4 பேரை போலீசார் கைது செய்து, செல்போனை மீட்டனர். காரப்பாக்கம் பெருங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 24). இவர் மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். கடந்த 29-ம் தேதி இரவு வழக்கம்போல் பணியை முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். காரப்பாக்கத்தில் நடந்துச்சென்றுக்கொண்டிருந்தபோது, நான்கு பேர் இவரை வழிமறித்து, மிரட்டி முத்துக்குமாரின் விலையுயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்து கந்தன் சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், செல்போனுடன் தப்பியோடிய கண்ணகி நகரை சேர்ந்த ராஜன் (வயது 26), அசோக்குமார் (வயது 29), ராஜ்குமார் (வயது 26), அசோக் (வயது 29) ஆகிய 4 பேரை போலீசார் நேற்றிரவு கைது செய்து செல்போனை மீட்டனர்.